News September 30, 2025
BREAKING: கரூருக்கு செல்லாதது ஏன்? விளக்கம்

கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து அரசியல் தலைவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்கு செல்லவில்லை. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் கரூருக்கு செல்ல முடியவில்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார். மேலும், கரூர் நிகழ்வு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், திமுக மீது தவெகவினர் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் சாடினார்.
Similar News
News March 18, 2026
PAN Card விண்ணப்பிக்க போறீங்களா?

ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய PAN Card விண்ணப்பங்களுக்கு ஆதார் மட்டும் போதுமானதாக இருக்காது. விண்ணப்பதாரர்கள் ஆதார் விவரங்களுடன் கூடுதல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளை கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆதார் அட்டையில் உள்ள பெயரே PAN Card-யிலும் அச்சிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 18, 2026
மக்கள் செக்ஸ் கன்டென்ட் பார்க்கின்றனர்: பிரபல நடிகை

‘KD: The devil’ கன்னட படத்தின் ‘சர்கே சுனார்’ பாடலில் கொச்சையான வரிகள் உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கு அப்படத்தின் இயக்குநர் பிரேமின் மனைவியும், நடிகையுமான ரக்சிதா பதிலளித்துள்ளார். அதில், கடந்த காலங்களில் இதுபோன்ற வரிகளை கொண்ட பாடல்கள் வரவில்லையா?; தற்போது மக்கள் பாலியல் உள்ளடக்கம் கொண்ட படங்களை பார்க்கிறார்கள்; ஒரு பாடலால் எனது கணவரை அவமதிப்பது சரியல்ல எனவும் பதிவிட்டுள்ளார்.
News March 18, 2026
அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு: நயினார்

<<19356260>>விளாத்திகுளத்தில் <<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தை நயினார் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது X பதிவில், மாணவியின் குடும்பத்தாரின் கண்ணீர் முகம் தனது நெஞ்சில் ஆறாத வடுவாக உறுத்துகிறது. இவ்வழக்கில், இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என கூறியுள்ளார்.


