News September 30, 2025

ஆன்லைன் புது படங்களை டவுன்லோட் பண்றீங்களா?

image

ஆன்லைனில் திருட்டுதனமாக வெளிவரும் படங்களை பார்ப்பது குற்றம் என்பதை விட, இதனால் நமது தனிப்பட்ட தகவல்களும் திருடுபோகும் என எச்சரிக்கப்படுகிறது. ஆம், பைரஸியில் படம் பார்க்கும் போது அல்லது டவுன்லோட் செய்ய முயலும் போது இடை இடையே பல விளம்பரங்கள் வரும். அதனை Close பண்ண முயற்சிக்க கிளிக் செய்யும் போது, தகவல்கள் ரகசியமாக திருடப்பட்டு விடுவதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 30, 2025

விலை கிடுகிடுவென உயர்ந்தது

image

ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மல்லிப்பூ கிலோ ₹1,000-க்கு விற்பனையாவதாக மதுரை பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல, முல்லை ₹700, செவ்வந்தி ₹220, சம்பங்கி ₹200, செண்டு மல்லி ₹60, கனகாம்பரம் ₹1200, ரோஸ் ₹250, பட்டன் ரோஸ் ₹280-க்கு விற்பனையாகிறதாம். பூக்களுடன் பழங்கள், காய்கறிகள் விலையும் இந்த பண்டிகைக் காலத்தில் தமிழகம் முழுவதும் உயர்ந்துள்ளது.

News September 30, 2025

கரூரில் இருந்து புறப்பட்டது ஏன்? விஜய் பதில்

image

கரூரை விட்டு புறப்பட்டதற்கான காரணத்தை விஜய் விளக்கியுள்ளார். நானும் மனுஷன் தான். அந்த நேரத்தில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டு கொண்டிருந்த போது, எப்படி என்னால் ஊரை விட்டு கிளம்பி வர முடியும் என்று இருந்தேன். ஆனால், நான் சம்பவ இடத்திற்கு மீண்டும் சென்றிருந்தால் அதை காரணம் காட்டி, வேறொரு பதட்டமான சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அதை தவிர்த்துவிட்டதாக விஜய் கூறியுள்ளார்.

News September 30, 2025

உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது: ஹேமமாலினி MP

image

பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை என கரூரில் ஆய்வு செய்த MP ஹேமமாலினி சாடியுள்ளார். பெரிய இடம் கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது எனவும் கூறியுள்ளார். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் விபத்துபோல் இல்லை என தெரிவித்த அவர், உள்நோக்கம் இருப்பதுபோல் தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அடுத்ததாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!