News September 30, 2025
கைதான TVK நிர்வாகிகளுக்கு மருத்துவ பரிசோதனை

கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, பதியப்பட்ட வழக்கில் அக்கட்சி நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கரூர் அரசு ஹாஸ்பிடலில் மருத்துவ பரிசோதனை செய்யபட்டது. இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 30, 2025
மனசு முழுக்க வலி… விஜய்யின் புதிய வீடியோ

கரூர் சம்பவத்தால், மனம் முழுக்க வலி… வலி மட்டுமே நிறைந்திருப்பதாக விஜய், இன்று வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> தெரிவித்துள்ளார். சுற்றுப் பயணத்தில் மக்கள் தன்னை பார்க்க வருவதற்கு அன்பும், பாசமும் மட்டுமே காரணம் என்றும், அதற்கு தான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களுக்கு பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கூடாது என்பது மனதில் எப்போதும் ஆழமாக பதிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
News September 30, 2025
அனைத்து உண்மைகளும் வெளிவரும்: விஜய்

கரூர் விவகாரத்தில் தங்கள் மேல் எந்த தவறும் இல்லை என விஜய் விளக்கமளித்துள்ளார். மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அவர், விரைவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் எனக் கூறியுள்ளார். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து மக்கள் பேசுவது, கடவுளே இறங்கி வந்து சாட்சி சொல்வது போல இருந்ததாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
சற்றுமுன்: விஜய் அவசர ஆலோசனை

தவெக நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் கைதாகியுள்ள நிலையில், அவர்களை ஜாமினில் வெளியே கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் நீலாங்கரை வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.