News September 30, 2025
தி.மலை: B.E/ DIPLOMA/ டிகிரி படித்தவர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் காலியாக உள்ள இன்ஜினியரிங் கிராஜூவேட் 458, டெக்னீசியன் 561, இன்ஜினியரிங் அல்லாத பிரிவு 569 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பி.ஏ., / பி.எஸ்சி., / பி.காம்., படித்தவர்கள் <
Similar News
News March 11, 2026
தி.மலையில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் பகுதியில் திமுக சார்பாக பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு, வீடு வீடாகச் சென்று, திமுகவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
News March 11, 2026
வந்தவாசி அருகே விஷம் குடித்து தற்கொலை!

தி.மலை: வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(49). விவசாயியான இவர், கடந்த மார்ச் 3ஆம் தேதி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த கோபால், பூச்சி மருந்தை குடித்தார். உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 11, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


