News September 30, 2025

கூகுள் பே மூலம் ₹10-க்கு தங்கம் வாங்கலாம்

image

தற்போது தங்கம் விற்கும் விலைக்கு, அதை வாங்கும் அளவுக்கு உங்களிடம் பணம் இல்லையா? கவலை வேண்டாம். கூகுள் பே மூலம் ₹10-க்கு டிஜி கோல்ட் வாங்கலாம். கூகுள் பேவுக்கு சென்று, ‘Gold Locker’ என ‘Search’ பண்ணுங்க. அதில் எவ்வளவு ரூபாய்க்கு தங்கம் வாங்க விரும்புகிறீர்கள் என்பதை உள்ளிடுங்கள். இதில் ஒருநாளுக்கு ₹50,000 வரை தங்கம் வாங்கமுடியும். இதில் தங்கத்தை வாங்குவதோடு அதனை விற்கவும் முடியும். SHARE.

Similar News

News March 22, 2026

பெண்கள் Safety-க்காக போனில் இத பண்ணுங்க!

image

➤Phone Settings-க்கு சென்று, Emergency SOS என தேடி அதை ON செய்யுங்கள் ➤நம்பகமானவர் (உறவினர்/நண்பர்) Contact-ஐ அதில் உள்ளிடுங்கள் ➤நீங்கள் ஏதேனும் பிரச்னையில் சிக்கும்போது Power button-ஐ 3 முறை அழுத்தினாலே போதும். உங்களுடைய Live Location போலீசுக்கும், உறவினருக்கும் சென்றுவிடும். பெண்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்த இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 22, 2026

அதிமுக பேச்சாளர்களுக்கு செலவுத் தொகை மறுப்பா?

image

தேர்தல் பிரசாரங்களின்போது ஒவ்வொரு கட்சியிலும் நட்சத்திர பேச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களுக்கு கட்சித் தலைமை & வேட்பாளர்கள் குறிப்பிட்ட தொகையை பிரசார செலவாக கொடுப்பதுண்டு. இந்நிலையில், அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கு கட்சித் தலைமை சார்பில் செலவுத்தொகை தரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாம். வேட்பாளர்களிடமே செலவினத்தை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.

News March 22, 2026

கொரோனாவை ஒழிக்க முதல் லாக்டவுன் வந்த நாள்!

image

கொரோனா வைரஸை தடுக்க நாடு முழுவதும் 14 மணி நேர லாக்டவுன் அறிவிக்கப்பட்ட தினமான 2020 மார்ச் 22-ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பின்னர், மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாள்கள் என தொடங்கிய முதற் கட்ட லாக்டவுன் பின்னர், பல கட்டங்களாக நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 5,33,847 பேர் உயிரை காவு வாங்கியதோடு, பல கோடி பேரின் வாழ்வாதாரத்தையும் சீரழித்தது. லாக்டவுனில் உங்கள் நினைவு என்ன?

error: Content is protected !!