News September 30, 2025
புதுகை: சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி

புதுக்கோட்டை மாவட்டம் கூகனூர் பகுதியில் நாகுடில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவம் அறிந்த நாகுடி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் முதற்கட்டமாக இவர் அரியமாக்காடு பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
Similar News
News October 30, 2025
புதுக்கோட்டை: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ?

புதுகை மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால் மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News October 30, 2025
புதுகை: மாணவிக்கு பிறந்த குழந்தை – வாலிபர்கள் கைது

விராலிமலை அருகே மதயானைப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (25), வடக்கன்வயலை சேர்ந்த சிவசூரியா (20) ஆகியோர் சேர்ந்து 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். இந்நிலையில் திடீரென 8-வது மாதத்திலேயே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த புகாரில் அனைத்து மகளிர் போலீசார் 2 வாலிபர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News October 30, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று (அக்.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


