News September 30, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களுக்கு வெளிநாட்டில் முதுகலை படிப்பு பயில 25-26ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க<> bcmbcmw.tn <<>>என்ற இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கி பூர்த்தி செய்து, சென்னையில் உள்ள சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தில் வருகிற அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Similar News

News September 30, 2025

நாகை: பணிச்சுமையால் இளம்பெண் தற்கொலை

image

நாகை மாவட்டம் திருப்புகலூர் கீழவீதியை சேர்ந்த தம்பதியினர் கண்ணன், சுதாராணி. சுதாராணி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாக பணிச்சுமை காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதானல் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 30, 2025

நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தம்பித்துரை பூங்கா அருகில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் அடைந்திருந்த கைலியால் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சிகப்பு சட்டை அணிந்துள்ள அவரது உடலை கைப்பற்றிய வெளிப்பாளையம் போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடலை அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News September 30, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. வங்கி கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 210 மனு பெறப்பட்டன. விரைவில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முக்கிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!