News September 30, 2025
விஜய் கைதாக வாய்ப்பா? நிலைமை இதுதான்

தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், விஜய்யும் கைது செய்யப்படலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால், அவர் கைதாக வாய்ப்பு மிக குறைவு. கரூர் துயர வழக்கில் விஜய் பெயர் சேர்க்கப்படவில்லை. அதுமட்டுமல்ல அவரை கைது செய்ய நினைத்தால், தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால், அவர் கைதாக வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 30, 2025
ஒரே வாரத்தில் உச்சம் தொட்ட ‘Zoho mail’

Zoho-வின் ‘Arattai’ ஆப் போலவே, ‘Zoho Mail’-ம் மக்களால் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் வரை, 10 லட்சம் யூஸர்கள் மட்டுமே இருந்த நிலையில், அது தற்போது 50 லட்சத்தை கடந்துள்ளது. உள்நாட்டு தயாரிப்புகளை ஆதரிக்க வேண்டுமென PM மோடி சொன்னதால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தானும் ‘ZohoMail’-க்கு மாறுவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 30, 2025
போலீஸிடம் இருந்து பெண்களை காப்பாற்றும் நிலை உள்ளது: EPS

திருவண்ணாமலையில் இரு காவலர்கள், இளம் பெண்ணை அவரது சகோதரி கண் முன்னரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக EPS வேதனை தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே, தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு, பெண்களை திமுக அரசு தள்ளியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
News September 30, 2025
BREAKING: ஒருநாள் கூடுதல் விடுமுறை.. அறிவித்தது அரசு

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்.3-ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்.1 சரஸ்வதி பூஜை, அக்.2 காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 2 நாள்கள் விடுமுறையாகும். அதன்பின் அக்.4, 5 (சனி, ஞாயிறு) விடுமுறை வருகிறது. அக்.3-ம் தேதி மட்டும் பணி நாளாக இருப்பதால், விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.