News September 30, 2025
நாகை மாவட்டத்தில் அரசு வேலை; கடைசி வாய்ப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிங்களில் காலியாக உள்ள ஓட்டுநர்/அலுவலக உதவியாளர்/எழுத்தர்/ இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 8 & 10-ம் வகுப்பு முடித்தவர்கள், இன்றுக்குள் (செப்.30) இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.16,000 – ரூ.71,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு<
Similar News
News September 30, 2025
நாகை: அடையாளம் தெரியாத ஆண் சடலம்

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தம்பித்துரை பூங்கா அருகில் அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், தான் அடைந்திருந்த கைலியால் மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சிகப்பு சட்டை அணிந்துள்ள அவரது உடலை கைப்பற்றிய வெளிப்பாளையம் போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடலை அனுப்பி வைத்தனர். அவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News September 30, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. வங்கி கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு மற்றும் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 210 மனு பெறப்பட்டன. விரைவில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முக்கிய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 30, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பாடபிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது, அந்த வகையில் மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது. ஐடிஐயில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று சேர்ந்திடலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 9499055737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.