News September 30, 2025

பெரம்பலூர்: உழவர் நல சேவை மையம் தொடங்க வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறையின் கீழ் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் மானிய உதவி பெற www.tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

பெரம்பலூர்: கட்சி பிரமுகர்களுடன் கலெக்டர் ஆலோசனை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கான அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

News March 14, 2026

பெரம்பலூர்: காலி சிலிண்டருடன் முற்றுகையிட்ட மக்கள்

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவ்வகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூரில் பொதுமக்கள் புக் செய்தும் கியாஸ் சிலிண்டர் வரததால், காலி சிலிண்டர்களை தூக்கி சென்று ஏஜென்சி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு ஏஜென்சிகளை மக்கள் முற்றையிட்டனர்

error: Content is protected !!