News September 30, 2025
பழியை துடைக்கும் பாசிச திமுக: நயினார் நாகேந்திரன்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேர்மையான விசாரணை மூலம் கண்டுபிடிப்பதைவிட்டு, மக்களை திசைதிருப்புவதற்கு உயிர் பிழைத்தோரைக் கைது செய்வது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பழியை துடைக்க பாசிச திமுக அரசு வழக்கு பதிவதாகவும், CBI விசாரணை தேவை எனவும் நயினார் கோரியுள்ளார்.
Similar News
News September 30, 2025
தீபாவளி போனஸ்; வந்தாச்சு HAPPY NEWS

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு வெளியாகவுள்ளது. மத்திய அரசின் Group C, non-gazetted group B ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம் (₹7,000), போனஸாக வழங்கப்படவுள்ளது. இதற்கு 6 மாதங்களுக்கு மேல் வேலை பார்த்திருக்க வேண்டும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் சில நாட்கள் மட்டுமே பணியாற்றிய காலநியமன ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். SHARE.
News September 30, 2025
கரூர் சென்ற பாஜக MPக்கள் கார் விபத்தில் சிக்கியது

கரூர் விபத்து குறித்து ஆய்வு செய்ய பாஜக நியமித்த ஹேமமாலினி தலைமையில் MP-க்கள் குழு, டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் வழியில் அவர்களது கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. ஆனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் அதே கார்களில் கரூர் புறப்பட்டு சென்றனர்.
News September 30, 2025
B.Ed, M.Ed மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல் கட்ட கலந்தாய்விற்கு பின் அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இங்கே <