News April 14, 2024
IPL 2024: அதிக ரன்கள் குவித்த முதல் 3 பேட்ஸ்மேன்கள்

IPLஇல் இதுவரை நடந்த போட்டிகளில் குவித்த ரன்கள் அடிப்படையில் பேட்ஸ்மேன்களை பிசிசிஐ பட்டியலிட்டுள்ளது. அதில் ஆர்சிபி வீரர் கோலி 319 ரன்கள் (6 போட்டிகள்) குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் ஒரு சதமும் அடங்கும். ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 284 ரன்களுடன் (6 போட்டிகள்) 2ஆவது இடத்திலும், இன்னொரு ராஜஸ்தான் வீரர் சாம்சன் 264 ரன்களுடன் (6 போட்டிகள்) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News September 9, 2025
தமிழ் சினிமாவும் ₹1000 கோடி வசூலும்..SK சொன்ன பாய்ண்ட்

தமிழ் சினிமாவுக்கு ₹1,000 கோடி வசூல் கனவாக இருக்கும் நிலையில், அது குறித்து SK சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழில் பான் இந்தியாவுக்கான சரியான ஸ்கிரிப்ட் இல்லை என்றும், மும்பை, பெங்களூரு போல டிக்கெட் விலை இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். ஆனால், டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என தான் கூறவில்லை என்று விளக்கமளித்தவர் ஹிந்தி மார்க்கெட்டை பிடிப்பது அவசியம் என சுட்டிக்காட்டினார்.
News September 9, 2025
தமிழகம் முழுவதும் உதயநிதி சுற்றுப்பயணம்

DCM உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் கட்சி ரீதியிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. தொகுதி வாரியாக பயணம் செல்லும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடவுள்ளார். அத்துடன், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை சிறப்பாக செயல்படுத்திய தொண்டர்களையும் கெளரவிக்க இருக்கிறார். இதற்கான பயணத் திட்டம் தயாராகி வருவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 9, 2025
BREAKING: நேபாள பிரதமர் பதவி விலகினார்

நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். நேற்று, மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உள்துறை, விவசாயத் துறை அமைச்சர்களும் பதவி விலகி இருந்தனர்.