News September 30, 2025

தென்காசி TNPSC தேர்வில் இத்தனை பேர் அப்செண்டா??

image

தென்காசி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 11,993 பேர் எழுதினர். மொத்தம் 14,980 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2,987 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. 53 மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்தை ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் சில தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News January 1, 2026

தென்காசி: GH-ல் இவை எல்லாம் இலவசம்

image

தென்காசி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News January 1, 2026

தென்காசி: மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!

image

கடையம் அருகே ரவணசமுத்திரத்தை சேர்ந்தவர் அகஸ்தியன் (62). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரது மகன் சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய கடையம் போலீசார் வழக்குப் பதிவி செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

சங்கரன்கோவில்: கல்லூரி மாணவி தற்கொலை!

image

சங்கரன்கோவில் அருகே கருத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் விஜயசாந்தி (22) கல்லூரி மாணவி. குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!