News September 30, 2025

IND vs WI: மற்றொரு வெஸ்ட் இன்டீஸ் வீரர் விலகல்

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இன்டீஸ் அணி, அக்.2-ல் தொடங்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், வெஸ்ட் இன்டீஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார். முதுகில் காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையிலும், மருத்துவ அறிக்கையில் காயத்தின் தாக்கம் உள்ளதாக இருந்ததால் அவர் விலகியுள்ளார். ஏற்கெனவே காயம் காரணமாக ஷமார் ஜோசப்பும் விலகினார்.

Similar News

News September 30, 2025

விஜய்க்கு துரை வைகோ கொடுத்த அட்வைஸ்

image

மற்ற கட்சிகளை போல தனது தொண்டர்களை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்க, ஒரு அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். இது விஜய்யுடைய கட்சிக்கும் நல்லது, பொதுமக்களுக்கும் நல்லது, அரசுக்கும் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் தவெக மாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததை சுட்டிக்காட்டி இதனை துரை வைகோ கூறியுள்ளார்.

News September 30, 2025

லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் MPC கூட்டத்தில் முடிவெடுத்து, நாளை அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அக்டோபர் தொடக்க நாளான நாளை வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியானால், தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும். இது லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 30, 2025

₹35,000 சம்பளம்: தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1,096 பணியிடங்களை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: ₹12,000 – ₹35,000 வரை (பதவிகளுக்கேற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!