News September 30, 2025
இரவில் ஜொலிக்கும் இந்திய கிராமம் PHOTOS

இந்தியாவின் லடாக் பகுதியில் 14,500 அடி உயரத்தில் அமைந்துள்ள ஹன்லே, அற்புதமான இயற்கைச் சிறப்பு மிக்க கிராமம். வானியல் விரும்பிகளுக்கான ஒரு சொர்க்கபூமி. இங்கே இரவு நேரத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை காண முடியும். 2022இல் இந்த கிராமம் இந்தியாவின் முதல் ‘டார்க் ஸ்கை ரிசர்வ்’ என அறிவிக்கப்பட்டது. இரவு நேரத்தில் ஜொலிக்கும் ஹன்லே கிராமத்தின் போட்டோஸ் மேலே உள்ளன. பிடித்திருந்தா லைக் போடுங்க!
Similar News
News September 30, 2025
முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 30, 2025
டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
RECIPE: தினை ஆப்பம் செய்வது எப்படி?

*தினை, இட்லி அரிசி, உளுந்து & வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும் *இதில், துருவிய தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும் *பச்சரிசியை தனியாக ஊறவைத்து, மோர் பதத்திற்கு அரைக்கவும் *இதை மிதமான தீயில் கிளறி, மாவு பசை பதத்திற்கு இறுகும் போது, உப்பு சேர்க்கவும் *இது ஆறிய பிறகு, அரைத்த ஆப்ப மாவுடன் இதனை சேர்க்கவும் *இதை மிருதுவதாக சுட்டு எடுத்தால், சுவையான தினை ஆப்பம் ரெடி. SHARE.