News September 30, 2025
சஹாலை 2-வது மாதத்திலே கண்டுபிடித்தேன்: EX மனைவி

சஹால் ஏமாற்றியதை திருமணம் ஆன 2-வது மாதத்திலேயே கண்டுபிடித்ததாக அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ தெரிவித்துள்ளார். ஜீவனாம்சமாக ₹60 கோடி கேட்டதாக வெளியான தகவல் தவறானது எனவும், செய்திகளில் வெளியான பொய்யான தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இருவரும் மனமுவந்து கேட்டதால் தான் விவாகரத்து விரைவில் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 30, 2025
ராணிப்பேட்டை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (செப் -30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகின்றது. ஆற்காடு நகராட்சி நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபம் ஆரணி ரோடு, வாலாஜா நகராட்சி இருபாலர் பள்ளி, அம்மூர் பேரூராட்சி ஹர்ஷா பேலஸ் அம்மூர் கூட்ரோடு, முக்கோணம் வட்டாரம் அரசு உயர்நிலைப்பள்ளி பெருங்களத்தூர், ஆற்காடு வட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி எசையனூர் ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெற உள்ளது.
News September 30, 2025
தங்கம் அவசியம் தானா? எச்சரிக்கும் நிபுணர்

தங்கத்தை வாங்கி வைப்பது ஒரு போதும் உங்கள் செல்வத்தை உயர்த்தாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதிலாக கோல்ட் ETF, Share market-ல் நீண்ட காலம் முதலீடுகளை செய்தால் உங்கள் பணம் இரட்டிப்பாகும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இந்தியாவில் தங்கம் முதலீடாக பார்க்காமல் அந்தஸ்தாக பார்க்கப்படுவதால், தங்கத்தில் நான்கில் 1 பங்கு மட்டும் முதலீடு செய்வதே சரியாக இருக்கும் என்கின்றனர். SHARE.
News September 30, 2025
இனி வாட்ஸ்அப்பில் ஆதார் அட்டை பெறலாம்

இனி ஆதார் அட்டை பெற இ-சேவை மையங்கள் செல்ல தேவையில்லை. MyGov உதவி மைய எண்ணான +91-9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைலில் Save செய்யுங்கள். இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Hi’ என மெசேஜ் செய்யுங்கள். பின்னர், அதில் வரும் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்தால் உடனடியாக ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இருப்பினும், இந்த முறையில் ஆதார் அட்டையை பெற DigiLocker-ல் ஆதாரை பதிவேற்றம் செய்திருப்பது அவசியம்.