News April 14, 2024
பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து

சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், தமிழ் கலாசாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.
News September 9, 2025
தவெகவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர், தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவிற்கு தெரிவித்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க EPS-ஐ அவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதறவைத்திருக்கிறதாம்.
News September 9, 2025
IOC-ல் 537 வேலை வாய்ப்புகள்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாகவுள்ள 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான (அப்ரண்டீஸ்) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பதவிக்கு ஏற்றார்போல் உதவித்தொகையும் வழங்கப்படும். கல்வித்தகுதி: +2, ITI. வயது வரம்பு: 18 – 24. மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.18. இதுகுறித்து மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <