News April 14, 2024
சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அமைதியாக இருங்கள்

சண்டையிடுவதை நிறுத்திவிட்டு, அமைதி காக்கும்படி இஸ்ரேல், ஈரானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேல், ஈரான் மோதல் போக்கால், மத்திய கிழக்கு அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உருவாகி இருப்பதை கண்டு கவலை அடைந்துள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், பதற்றத்தைத் தணித்து அமைதி காக்கவும், வன்முறை பாதையிலிருந்து விலகி ராஜ்ஜீய பாதைக்கு திரும்பும்படியும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
Similar News
News September 9, 2025
இருதய பிரச்னை, சுகருக்கு எவ்ளோ ஈஸி தீர்வு பாருங்க..

இப்போதெல்லாம் யாரை கேட்டாலும் சுகர், இருதயம் சார்ந்த பிரச்னைகள் இருப்பதாக சொல்கின்றனர். அவற்றுக்கு சரியான கைவைத்தியம் இருக்கிறது. கருப்பு எள்ளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதை தினமும் குடியுங்கள். அதிலிருக்கும் மெக்னீசியம், நார்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் பி, கால்சியம் போன்ற சத்துக்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் நீங்கும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE.
News September 9, 2025
யார் அடுத்த துணை ஜனாதிபதி?

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய 781 MP-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். பார்லிமென்ட்டில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. பின்னர் 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுமார் 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. NDA கூட்டணியில் சி.பி.ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் களத்தில் உள்ளனர்.
News September 9, 2025
முதுகு வலியை ஈசியாக விரட்டும் யோகா!

✦முதுகு தண்டு வலிமை பெற, தொப்பை குறைய சேது பந்தாசனம் உதவும்.
➥முதலில் தரையில் மல்லாந்து படுத்து, முழங்கால்களை மடித்து, கால்களை தரையில் ஊன்றவும்.
➥பாதங்களை இடுப்பிற்கு அருகே வைத்து இடுப்பை மேலே உயர்த்துங்கள். கைகளை பக்கவாட்டில் தரையில் பதியுங்கள்
➥மார்பு, கழுத்து, இடுப்பு பகுதிகளை நேராக வைத்து, இந்த நிலையில் சில நொடிகள் இருந்துவிட்டு, மெதுவாகக் கீழே இறங்க வேண்டும். Share it to friends.