News September 29, 2025
₹95,948 கோடிக்கு செல்போன் ஏற்றுமதி: சாதிக்கும் சென்னை!

இந்திய அளவிலான செல்போன் உற்பத்தியில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் செல்போன் உற்பத்தியில் சென்னையின் பங்களிப்பு மட்டும் 45.68% ஆகும். அடுத்தடுத்த இடங்களில் கோலார், டெல்லி NCR, அகமதாபாத் ஆகிய நகரங்கள் உள்ளன. சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட செல்போன்களின் ஏற்றுமதி மதிப்பு ₹95,948 கோடி ஆகும். இந்த தகவலை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Similar News
News September 30, 2025
பா.ரஞ்சித் படத்தில் பொன்னியின் செல்வன் நடிகை

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தில் நடிகை ஷோபிதா துலிபலா இணைந்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு, இப்படத்தில் சிறப்பான ரோல் உள்ளதாக ரஞ்சித் கூறியுள்ளார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இதன் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 30, 2025
சஹாலை 2-வது மாதத்திலே கண்டுபிடித்தேன்: EX மனைவி

சஹால் ஏமாற்றியதை திருமணம் ஆன 2-வது மாதத்திலேயே கண்டுபிடித்ததாக அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ தெரிவித்துள்ளார். ஜீவனாம்சமாக ₹60 கோடி கேட்டதாக வெளியான தகவல் தவறானது எனவும், செய்திகளில் வெளியான பொய்யான தகவல்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இருவரும் மனமுவந்து கேட்டதால் தான் விவாகரத்து விரைவில் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News September 30, 2025
கரூர் துயரத்தில் 4 பக்கமும் தவறு: ப.சிதம்பரம்

கரூர் துயர சம்பவத்தில் 4 பக்கமும் தவறு இருப்பதாக தோன்றுகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தோன்றிய ஒரு யோசனையை தலைமை செயலாளரிடம் கூறியதாகவும், இதுபோன்று பலர் தெரிவித்த யோசனைகளை பரிசீலித்து எடுக்கப்படும் முடிவுகளை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.