News September 29, 2025
உங்கள் CIBIL ஸ்கோரை அதிகரிக்க டிப்ஸ்!

*கிரெடிட் கார்டில், உங்கள் கடன் வரம்பை மீறி பயன்படுத்தாதீர்கள் *கடன் கட்டுவதை எப்போதும் நிறுத்திவிடாதீர்கள். Default ஆனால் கடன் பெறவே முடியாது *ஒரே நேரத்தில் பல இஎம்ஐ கடன்களை வாங்காதீர்கள் *இஎம்ஐ தவணையை உரிய காலத்துக்குள் கட்டி விடுங்கள் *அடிக்கடி உங்கள் கிரெடிட் ஹிஸ்டரியை கவனியுங்கள் *secure loan(கார், ஹோம்) மற்றும் insecure loans(பர்சனல் லோன், கிரெடிட் கார்டு) சரியான கலவையில் இருப்பது நல்லது.
Similar News
News December 8, 2025
BREAKING: கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய பரிந்துரை

திமுக முக்கிய அமைச்சர்களில் ஒருவரான கே.என்.நேரு மீது FIR பதிவு செய்ய ED பரிந்துரை செய்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த பணி நியமனங்களில் லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் ₹1,020 கோடி பெறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக நேரு மீது FIR பதிவு செய்து, விசாரனை நடத்த தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு 252 பக்க ஆவணங்களை ED அனுப்பியுள்ளது.
News December 8, 2025
ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!

ஹைதராபாத்தில், USA துணை தூதரகம் அமைந்துள்ள உள்ள சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமைவெளி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கெனவே சாலைகளுக்கு <<18292123>>கார்பரேட் நிறுவனங்களின்<<>> பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தன் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.


