News April 14, 2024
BREAKING: ₹1க்கு சானிட்டரி நாப்கின்

சானிட்டரி நாப்கின் ₹1க்கு வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சானிட்டரி நாப்கினுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஒரு பாக்கெட் குறைந்தபட்சம் ₹25 – ₹50 வரை; அதாவது ஒரு நாப்கின் ₹3க்கும் மேல் விற்பனையாகும் நிலையில், தற்போது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது போல் நாப்கின் ₹1க்கு வழங்கினால், பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதனால், பெண்களின் சுகாதாரம் மேம்படும்.
Similar News
News September 9, 2025
ஆசிய கோப்பையில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் UAE அணியுடன் மோதுகிறது. குரூப் A-ல் உள்ள இந்தியா செப்.10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், செப்.14ஆம் தேதி பாகிஸ்தானையும், செப்.19ல் ஓமனையும் எதிர்கொள்கிறது. 2 குரூப்பிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் 8 முறை சாம்பியனான இந்தியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
News September 9, 2025
து.ஜனாதிபதி தேர்தலில் நியமன MP-க்கள் வாக்களிக்கலாமா?

நாட்டின் 17-வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் துவங்குகிறது. இதில் லோக்சபா, ராஜ்யசபா MP-க்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். அந்த வகையில், ராஜ்யசபாவில் உள்ள நியமன MP-க்களும் வாக்களிக்கலாம். ஆனால், அவர்களால் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாது. ராஜ்யசபாவில் 12 நியமன MP-க்களை ஜனாதிபதி, தனது அதிகாரத்துக்கு உட்பட்டு நியமனம் செய்கிறார்.
News September 9, 2025
தவெகவில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்?

சமீபத்தில் மத்திய அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற அருண்ராஜ், கொள்கை பரப்பு பொதுச்செயலாளராக தவெகவில் நியமிக்கப்பட்டார். பாஜகவின் காண்டாக்டுகளை வைத்திருக்கும் இவர், தவெகவின் ஒவ்வொரு நகர்வையும் உடனுக்குடன் பாஜகவிற்கு தெரிவித்துவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தவெகவை அதிமுக கூட்டணியில் இணைக்க EPS-ஐ அவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படும் தகவல்கள் பனையூரை பதறவைத்திருக்கிறதாம்.