News September 29, 2025

FLASH: 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

image

3 ஐஏஎஸ் அதிகாரிகளை TN அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரையும், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக ஜான் லூயிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News September 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 30, 2025

தவெக மா.செ. கைதில் மர்மம்: மனைவி பேட்டி

image

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை கைது செய்ததற்கான எந்த வீடியோ ஆதாரமும் இல்லாத நிலையில், அவர் மீது சிறு கீறல் ஏற்பட்டாலும் போலீஸே பொறுப்பு என்று அவரது மனைவி ராணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், அஜித்குமார் லாக்கப் மரணம் போல் ஆகிவிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

News September 30, 2025

கரூரில் டாக்டர் அனுமதியின்றி 7 பேர் டிஸ்சார்ஜ்

image

கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சிகிச்சையிலிருந்த 7 பேர் டாக்டர் அனுமதியின்றி ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கரூர் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 110 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 51 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், 2 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!