News April 14, 2024
பாஜக தேர்தல் அறிக்கைக்காக நாடே காத்திருந்தது

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்காக ஒட்டுமொத்த நாடும் காத்திருந்ததாக மோடி தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், பாஜக மீதான நம்பிக்கையால் தேர்தல் அறிக்கையை தயாரிக்க லட்சக்கணக்கான மக்கள் ஆலோசனைகள் முன்வைத்ததாகவும், ஒட்டுமொத்த நாடும் அறிக்கைக்காக காத்திருந்ததாகவும், ஏனெனில் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பதை பாஜக நிச்சயம் நிறைவேற்றுமென நாட்டுக்கே தெரியும் என்றார்.
Similar News
News September 9, 2025
நேபாளம் போராட்டம்: விசாரணைக் குழு அமைப்பு

நேபாளத்தில் FB, Insta உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்ற Gen Z தலைமுறையினரின் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதற்கான தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்த அந்நாட்டு PM ஷர்மா ஒலி, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, 15 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
உங்கள் உடல் உறுப்புகளை காக்கும் உணவுகள்

நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அதற்கு உங்கள் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஒவ்வொரு உறுப்பும் வலிமையாக இருக்க அதற்கென்று தனித்தனி உணவுகள் இருக்கிறது. இதனை சரியாக எடுத்துக்கொண்டால் உங்கள் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். அது எந்தெந்த உணவுகள் என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. இந்த நல்ல தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News September 9, 2025
ஆசிய கோப்பையில் இந்தியா யாருடன் மோதுகிறது?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் UAE அணியுடன் மோதுகிறது. குரூப் A-ல் உள்ள இந்தியா செப்.10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், செப்.14ஆம் தேதி பாகிஸ்தானையும், செப்.19ல் ஓமனையும் எதிர்கொள்கிறது. 2 குரூப்பிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இதில் 8 முறை சாம்பியனான இந்தியா இம்முறையும் கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.