News September 29, 2025
நாகை: 210 மனுக்களுக்கு தீர்வு -ஆட்சியர் உத்தரவு

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 210 மனுக்களை பெற்ற அவர், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Similar News
News September 30, 2025
நாகை: இலங்கையே சேர்ந்த இளம்பெண் கைது

நாகை மாவட்டம், கோடியக்கரை எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் ஸ்டனிஸ் அனஸ்ட்ராஜ். இவருடைய மனைவி மேரிடென்சியானா(29). இலங்கையை சேர்ந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு டூரிஸ்ட் விசாவில் இந்தியா வந்த நிலையில், கோடியக்கரையில் வசிக்கும் ஸ்டனிஸ் அனஸ்ட்ராஜை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து போலியான ஆவணங்களை பயன்படுத்தி மேரிடென்சியானா இந்திய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதையறிந்த வேதாரண்யம் போலீசார், அவரை கைது செய்தனர்.
News September 30, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (செப்.29) இரவு 10 மணி முதல் இன்று(செப்.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 29, 2025
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, 2025-2026ம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று(செப்.29) பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.