News September 29, 2025
தண்ணீரே குடிக்காத உயிரினம் எது தெரியுமா?

கங்காரு எலிகள் தனது வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அருந்தாமல் இருக்கும். தான் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும் போது சிறிதளவு நீர் அதன் உடலில் சேருமாம். அதுவே இந்த எலிகளின் கிட்னிகள் செயல்பட போதுமானதாக இருக்கிறது. அத்துடன், நீரிழிவு நோய் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க இவ்வகை எலிகள் ஆழமான மற்றும் குளிர்ச்சியான பொந்துகளை அமைத்து அங்கேயே தங்குகின்றனவாம். இந்த Interesting தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News December 9, 2025
புதுவையில் இன்று விஜய் பிரசாரம்

கரூர் துயரத்தை அடுத்து, முதல்முறையாக விஜய் இன்று புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை தவிர்க்கும் பொருட்டு, இந்த முறை கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. கர்ப்பிணிகள், குழந்தையுடன் வரும் பெண்கள் நீங்கலாக 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. QR கோடு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
News December 9, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம்: இன்று விசாரணை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. தனி நீதிபதி G.R.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும் ஏற்றாததால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 9, 2025
அண்ணாமலையை ரகசியமாக சந்தித்தார்.. புதிய திருப்பம்

கோவையில் உள்ள தனது இல்லத்தில் TTV தினகரனுக்கு அண்ணாமலை நேற்று இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால், அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றுள்ளாராம். டிடிவி கூட்டணி ஆப்சனை ஓப்பனாக வைத்திருக்கும் நிலையில், அண்ணாமலை உடனான சந்திப்பு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.


