News September 29, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ₹480 அதிகரித்திருந்த நிலையில், மாலையிலும் சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ₹1,040 அதிகரித்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,770-க்கும், சவரன் ₹86,160-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News September 29, 2025

பிரசவத்துக்கு பிறகு வரும் அந்த பிரச்னை; எப்படி தவிர்க்கலாம்?

image

பிரசவத்துக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் (Postpartum depression) ஏற்படுகிறது. இதனை கையாள சில வழிகள் இருக்கு. ➤கணவரிடம் மனதில் தோன்றுவதை பேசுங்கள் ➤குழந்தை தூங்கும் நேரத்தில் நீங்களும் ஓய்வெடுங்கள் ➤வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு வேலைகளை கணவரிடம் பிரித்துக்கொடுங்கள் ➤சத்தான உணவை சாப்பிடுங்கள் ➤நடைபயிற்சி செய்யுங்கள் ➤தேவைப்பட்டால் உளவியல் ஆலோசகரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 29, 2025

FLASH: 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

image

3 ஐஏஎஸ் அதிகாரிகளை TN அரசு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி இணை ஆணையராக கற்பகம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநராக அண்ணாதுரையும், பால் உற்பத்தி மற்றும் பால் மேம்பாட்டு ஆணையராக ஜான் லூயிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News September 29, 2025

இந்தியாவில் டிரெண்டாகும் ‘ஸ்லீப் டூர்’

image

இந்தியாவில் ‘ஸ்லீப் டூர்’ அதிகரித்து வருகிறது. இன்றைய சுற்றுலா பயணிகள், டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை சுற்றிப் பார்ப்பதை விட, ஓய்வு எடுக்கவே அதிகம் விரும்புகின்றனர். ஏற்கெனவே, வாழ்க்கை ஓட்டத்தில் இருக்கும் மக்கள், சுற்றுலா என்ற பெயரில் மீண்டும் அலைந்து திரிந்து சோர்வு அடைய விரும்புவதில்லை. அவர்கள் தேடுவதெல்லாம் ஒரு அமைதியான இடம். நீங்க எந்த மாதிரி சுற்றுலா பயணி? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!