News April 14, 2024
வேலூர்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின்134 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News August 22, 2025
கீழ்கவரப்பட்டில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூர்: கணியம்பாடி ஒன்றியம், கீழ்கவரப்பட்டு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நாளை (ஆக.23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆய்வு செய்தார். இந்த முகாமில் பொதுமக்களுக்கு 17 சிறப்பு மருத்துவர்கள் மூலம் பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
News August 22, 2025
வேலூர்: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

வேலூர் இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
வேலூரில் பொது இடத்தில் மது அருந்திய 7 பேர் கைது.

வேலூர், காகிதப்பட்டறை பகுதியில் நேற்று (ஆக.21) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்துறையினர், பொது இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த கார்த்திக் (32), ஹரிஸ்குமார் (28), ரஞ்சித்குமார் (37), சவுந்தர் (32), சசிக்குமார் (55), விக்னேஷ் (35), மற்றும் ரவி (53) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனர்.