News September 29, 2025

கரூரில் 2-வது நாளாக தொடரும் விசாரணை

image

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக கரூரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய உறவினர்களிடம் கூட்டத்திற்கு சென்ற நேரம், தொடர்புகொள்ள முடிந்ததா உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும், அவருக்கு உதவ 5 பேர் கொண்ட குழுவினர் இதர தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

Similar News

News September 29, 2025

BREAKING: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ₹480 அதிகரித்திருந்த நிலையில், மாலையிலும் சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் ₹1,040 அதிகரித்து இதுவரை இல்லாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,770-க்கும், சவரன் ₹86,160-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News September 29, 2025

இந்த கோழியை கண்டுபிடிக்க ₹50 கோடி!

image

ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கலிவி கோழி காணப்படுகிறது. அழிந்து வரும் உயிரினமாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முதலாக 1848-ல் காணப்பட்ட இப்பறவை இனம், அதன்பின்னர் அழிந்துவிட்டதாக கருதப்பட்டது. ஆனால், 1986-ல் மீண்டும் காணப்பட்ட நிலையில், இதை அடையாளம் கண்டு பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ₹50 கோடி ஒதுக்கியுள்ளன. பகலில் தூங்கும் இப்பறவை, இரவில் உணவு சேகரிக்கிறது.

News September 29, 2025

தினமும் இதை செய்கிறீர்களா?

image

தினசரி பழக்கவழக்கங்கள் நீண்ட கால ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில பழக்கவழக்கங்களை மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. இவை மன அழுத்தத்தை குறைந்து, மனநிலையை மேம்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆழ்ந்த உறக்கத்துக்கு வழிவகுக்கிறது. இதில் நீங்கள் எதை செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!