News September 29, 2025
ராம்நாடு: இனிமே முழு கண்காணிப்பில்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றச்சாட்டுகளை தடுக்கும் விதமாக SAFE RAMAND திட்டத்தின் கீழ் பரமக்குடி தாலுகா பெங்களூர் பகுதியில் 5 சிசிடிவி கேமராவும், அரியேனந்தல் பகுதியில் 4 சிசிடிவி கேமராவும், உரப்புளி பகுதியில் 2 சிசிடிவி கேமராவும், கமுதி செங்கப்படை பகுதியில் 3 சிசிடிவி கேமரா என மாவட்ட முழுவதும் மொத்தம் 3128 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 29, 2025
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்வர்

இராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் வரும் அக்.2ம் தேதி மதுரையிலிருந்து கார் மூலம் புறப்பட்டு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தரும் அவர் இரவு தங்கி அக்.3ஆம் தேதி காலை 10 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
News September 29, 2025
ராம்நாடு: சாலை விபத்தில் பெண் பலி

ராமநாதபுரம் மாவட்டம் மறவர் கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் முருகன் அவரது மனைவி ஸ்ரீதேவி, டூவீலரில் மதுரை சென்று விட்டு ஊர் திரும்பிய வழியில், அருப்புக்கோட்டை அருகே நேற்றிரவு (28/9/25) பரளச்சி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரளச்சி காவல்துறை அதிகாரி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News September 29, 2025
ராம்நாடு: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <