News September 29, 2025

ஆசிய கோப்பையில் சொதப்பிய சுப்மன் கில்

image

ஆசிய கோப்பையில் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடரில் அவர் ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் 12 ரன்னுக்கு அவுட்டான அவர், ஒட்டுமொத்தமாக 7 இன்னிங்ஸில் 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஓபனிங் ஸ்லாட்-ஐ விட்டுக்கொடுத்த சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் உள்பட 132 ரன்கள் அடித்துள்ளார். இனி ஓபனிங் இறங்கவேண்டியது யார்?

Similar News

News September 29, 2025

புதன்கிழமை பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு அறிவிப்பு

image

அக்.2 விஜயதசமி அன்று அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் EMIS தளத்தில் பதிவிடப்படுவதை மேற்பார்வை செய்ய CEO-க்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடர்கிறது.

News September 29, 2025

Cinema Roundup: சிம்பு படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுப்பு

image

*’யாத்திசை’ இயக்குநர் தரணி ராஜேந்திரனின் புதிய படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். *தன்னை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என மஹிமா நம்பியார் எச்சரிக்கை. *சிம்புவின் அடுத்த படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டதாக தகவல். *’GOAT’ நாயகி மீனாட்சி செளத்ரி இந்தி திரையுலகில் அறிமுகமாவதாக தகவல்.

News September 29, 2025

வங்கி அக்கவுண்ட் இருக்கா.. இத உடனே பண்ணுங்க!

image

PM ஜன்தன் வங்கி கணக்குகள் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகும் நிலையில், நாளைக்குள் Re-Kyc அதாவது தகவலை புதுப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடையூறின்றி வங்கியின் சேவைகள், அரசின் மானியங்களை பெறவும் இந்த KYC மறுபுதுப்பித்தலை செய்யும்படி RBI கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது 55.90 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. SHARE IT.

error: Content is protected !!