News April 14, 2024
திருவள்ளூர்: ரயில் மோதி சிறுமி பலி

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 9ம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்தார். திருப்பத்தூரைச் சேர்ந்த அன்பழகனின் மகள் மகாலட்சுமி. விடுமுறைக்கு புட்லூரில் உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்றிரவு பழனி செல்வதற்காக ரயில் ஏற வந்த போது, தண்டவாளத்தைக் கடக்கையில் ரயில் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 6, 2025
திருவள்ளூர்: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆர்.கே பேட்டை, பூந்தமல்லி, சோழவரம், கடம்பத்தூர், திருத்தணி, புழல் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <
News August 5, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*.
News August 5, 2025
திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நிறுத்த கோரிக்கை

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 11 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் தினசரி பயணியர் மற்றும் நீண்ட துார பயணிகள் அவதி அடைகின்றனர். எனவே திருவள்ளூர் ரயில் நிலையத்தில், கோவை, பிருந்தாவன், இன்டர்சிட்டி, லால்பாக், லோகமான்ய திலக் டெர்மினஸ், கச்சேகுடா, நீலகிரி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய ஒன்பது விரைவு ரயில்களும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.