News April 14, 2024
தமிழக காவல்துறையில் இளநிலை நிருபர்கள் வேலைவாய்ப்பு

தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மற்றும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
கோவை: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு!

கோவையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 8, 2025
கோவை: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) கோவை மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இந்த தகவலை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 8, 2025
BREAKING: பொள்ளாச்சி அருகே விபத்து 2 பேர் பலி

பொள்ளாச்சி, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். அவரது மனைவி ஜோதி. மகள் சந்தியா, பேத்தி கனிஷ்கா மற்றம் ஒன்றரை வயது ஆண் குழந்தை என 5 பேரும் ஒரே பைக்கில் சென்றனர். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் முருகேஷ், கனிஷ்கா இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


