News September 29, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற ஸ்ரீஹரி நட்ராஜ்

*ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில், ஆடவர் 200மீ ப்ரீஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக்கில் ஸ்ரீஹரி நட்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றார். *கத்தார் ஸ்குவாஷ் போட்டியில், இந்தியாவின் அபய் சிங் EX உலக சாம்பியன் கரீம் கவாத்தை வீழ்த்தி அசத்தல். *புரோ கபடி லீக்கில் இன்று ஹரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதல். *ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், 50 மீ ரைபிள் 3 பிரிவில், அனுஷ்கா தோக்கூர் தங்கம் வென்றார்.
Similar News
News January 12, 2026
சிங்கம் வாயில் மாட்டிக்கொண்ட விஜய்: செல்வப்பெருந்தகை

விஜய் NDA கூட்டணியில் இணைய வேண்டும் என்பதற்காகவே CBI-ஐ வைத்து பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது . இந்நிலையில், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொள்வது போல சிபிஐ வலையில் விஜய் சிக்கியிருக்கிறார் என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். CBI-ஐ பாஜக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், அதை பயன்படுத்திதான் பாஜக விஜய்யை டெல்லிக்கு அழைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
News January 12, 2026
இன்று முதல் புது ரூல்ஸ்.. உடனே போனில் மாற்றுங்க

இன்று (ஜனவரி 12) முதல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டுமென்றால், IRCTC கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று புதிய ரூல்ஸ் அமலுக்கு வந்துள்ளது. IRCTC கணக்குடன் இதுவரை ஆதாரை இணைக்காதவர்கள், உங்கள் போனில் இருக்கும் முன்பதிவு ஆப்பிலேயே ஆதாரை அப்டேட் செய்யலாம். ஆதாரை இணைக்கவில்லை எனில், டிக்கெட் புக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
News January 12, 2026
ஹாஸ்பிடல் கொலைக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில், உயிர்காக்கும் ஹாஸ்பிடல்கள் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக மாறும் அளவுக்கு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். TN-யையும், TN மக்களையும் காப்பாற்ற ஒரே வழி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


