News September 29, 2025

மூலிகை: மாசிக்காயின் மருத்துவ குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ✱தேமல், படை, சொறி, சிரங்கு போன்றவற்றின் மீது மாசிக்காய் பொடியை நீரில் குழைத்து தினமும் தடவி வர குணமடையும் ✱மாசிக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து ஒரு நாளைக்கு 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு குணமாகும் ✱டான்சில்ஸ், இருமல், தொண்டைக்கட்டு ஆகிய பிரச்னைக்கு மாசிக்காய் பொடியை, கற்பூரவள்ளி இலை சாற்றுடன் கலந்து சாப்பிட குணமாகும். SHARE.

Similar News

News September 29, 2025

குரூப் 2 தேர்வு: ஒரு இடத்துக்கு 650 பேர் போட்டி

image

குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வை சுமார் 1.34 லட்சம் பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுத 5.53 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று 4.18 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். அதன்படி 645 குரூப் 2, 2ஏ காலிப் பணியிடங்களில், ஒரு இடத்துக்கு மட்டும் 650 பேர் போட்டி போடுகின்றனர். தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு எளிதாக இருந்ததா?

News September 29, 2025

ஆசிய கோப்பையில் சொதப்பிய சுப்மன் கில்

image

ஆசிய கோப்பையில் இந்திய துணை கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடரில் அவர் ஒருமுறை கூட அரைசதம் அடிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் 12 ரன்னுக்கு அவுட்டான அவர், ஒட்டுமொத்தமாக 7 இன்னிங்ஸில் 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஓபனிங் ஸ்லாட்-ஐ விட்டுக்கொடுத்த சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸில் ஒரு அரைசதம் உள்பட 132 ரன்கள் அடித்துள்ளார். இனி ஓபனிங் இறங்கவேண்டியது யார்?

News September 29, 2025

EPS சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

image

இன்று, நாளை மற்றும் அக்.4-ம் தேதி தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் EPS மேற்கொள்ளவிருந்த ‘மக்களைக்_காப்போம் தமிழகத்தை_மீட்போம்’ பரப்புரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. அக்.2 தருமபுரியின் பாப்பிரெட்டிபட்டி, அரூரிலும், அக் 3 பாலக்கோடு, பென்னாகரத்திலும், அக்.6 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரிலும் இபிஎஸ் பரப்புரை செய்வார் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!