News September 29, 2025

தென்காசி: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News December 7, 2025

தென்காசியில் அப்ரண்டீஸ் மேளா.. கலெக்டர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தின் பயிற்சி‌ அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுனர் அப்ரண்டீஸ் மேளா, தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் சேர்க்கை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 7, 2025

தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 7, 2025

தென்காசி: கொலை வழக்கில் 11 பேர் அதிரடி கைது

image

நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக மாற்றுத்திறனாளி விவசாயியான சங்கரலிங்கம் கொலை செய்யப்பட்ட நிலையில் வழக்குப்பதிவு செய்து  அதே கிராமத்தை சேர்ந்த சங்கரலிங்கத்தின் உறவினர்களான சக்திவேல், ராமர், மாரியப்பன், பேச்சிமுத்து, சுப்புராஜ், துரை, செல்லையா, மாங்கனி, காளியம்மாள் மற்றும் மாரியம்மாள்  உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!