News September 29, 2025

அரசியலாக மாறியிருக்கும் கரூர் துயரம்

image

ஒருபுறம் எதிர்க்கட்சிகள், மறுபுறம் ஆளும் கட்சியின் கூட்டணி தலைவர்கள் மாறிமாறி குற்றச்சாட்டி வருவதால், கரூர் துயரம் தற்போது முழுக்க முழுக்க அரசியலில் சிக்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற துயரம் இனிமேல் நடக்கக்கூடாது; அதற்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமே தவிர குற்றச்சாட்டுவதால் என்ன பயன். இனியும் ஒரு அப்பாவி உயிர் கூட போகக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர்.

Similar News

News September 29, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்வு..

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ₹1 அதிகரித்து ₹160-க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹1,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை சுமார் ₹15,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

News September 29, 2025

அண்ணாமலை குறித்து டெல்லி பாஜகவிடம் புகாரா?

image

<<17858248>>அண்ணாமலையின் செயலால்<<>> நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் துயரத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹1 லட்சம் வழங்கப்படும் என அண்ணாமலை நேற்று அறிவித்தார். மாநில அளவில் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர், நிதியுதவியை எப்படி அறிவிக்கலாம் என கேள்வி எழுப்பும் நயினாரின் ஆதரவாளர்கள், இதுதொடர்பாக டெல்லி பாஜகவிடம் புகார் தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 29, 2025

டிவிக்கு ஜெயில்.. பாக்., டீமை கிண்டலடித்த பாக்., Ex. வீரர்!

image

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மண்ணை கவ்வுவதை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நேற்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வெளியிட்ட பதிவு, வைரலாகி வருகிறது. நேற்று தோல்வியடைந்ததால், டிவியை கோபத்தில் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக, அதனை இரும்பு கம்பிகளுக்குள் பூட்டிவைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!