News September 29, 2025
கரூர் துயரம்: விஜய் மீது குற்றம் சுமத்தும் DMK கூட்டணி கட்சிகள்

கரூர் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் சந்தேகம் எழுப்பும் நிலையில், திமுக கூட்டணி தலைவர்களான திருமா, வேல்முருகன் உள்ளிட்டோர் விஜய் மீது குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, பரப்புரையில் சரியான திட்டமிடல் இல்லை, கட்டுக்கோப்பு இல்லை; விஜய்யின் காலதாமதமான வருகை போன்ற பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டுகின்றனர். சரியான திட்டமிடல் இருந்தால் உயிர் சேதத்தை தவிர்த்து இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News September 29, 2025
டிவிக்கு ஜெயில்.. பாக்., டீமை கிண்டலடித்த பாக்., Ex. வீரர்!

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து மண்ணை கவ்வுவதை ஜீரணிக்க முடியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நேற்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா வெளியிட்ட பதிவு, வைரலாகி வருகிறது. நேற்று தோல்வியடைந்ததால், டிவியை கோபத்தில் உடைத்துவிடக்கூடாது என்பதற்காக, அதனை இரும்பு கம்பிகளுக்குள் பூட்டிவைத்திருக்கும் போட்டோவை பகிர்ந்து அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
News September 29, 2025
SIM CARD-களுக்கு Expiry Date இருக்கா?

SIM CARD-களுக்கு Expiry Date இல்லையென்றாலும், 90 நாட்களுக்கு மேல் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருந்தால் அது செயலிழந்து போகலாம். அதோடு, தண்ணீரில் விழுந்தாலோ, அடிக்கடி கழற்றி மாட்டும்போதோ SIM CARD சேதமடையலாம். இதனால் நெட்வொர்க் இணைப்பு பிரச்னைகள் ஏற்படும். எனவே, இத்தகைய பிரச்னைகளை சந்தித்தால் மட்டும், பயனர்கள் அவர்களது தொலைபேசி சேவை வழங்குனரை அணுகி, SIM CARD-ஐ மாற்றலாம். SHARE.
News September 29, 2025
BREAKING: கரூர் துயரத்திற்கு செந்தில் பாலாஜி காரணம்: TVK

கூட்ட நெரிசல் சம்பவத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாக தவெக குற்றஞ்சாட்டியுள்ளது. மதுரை HC-ல் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்துள்ள மனுவில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி குறித்து விஜய் பேசிக்கொண்டிருந்த போது, செருப்பு, கற்கள் வீசப்பட்டன என்றும் அப்பாவி மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதாகவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.