News April 14, 2024
ஈரான் ஆதரவு நாடுகள், இஸ்ரேல் ஆதரவு நாடுகள் (3)

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ட்ரோன்கள், ஏவுகணைகளை அளித்து ஆரம்பம் முதல் ஈரான் உதவி செய்து ஆதரவு அளிக்கிறது. இதனால் ரஷ்யா, ஈரானுக்கு உறுதுணையாக கடைசியாக இறங்கும் என நம்பப்படுகிறது. ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்தபடி இஸ்ரேல் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை வீசக்கூடும். வடகொரியாவும், ஈரானுக்கு ஆயுதங்களை அளித்து உதவ வாய்ப்புள்ளது.
Similar News
News November 14, 2025
EPS-க்கு மன்னிப்பு கடிதம் எழுதவில்லை: வைத்திலிங்கம்

OPS ஆதரவாளர் <<18275451>>வைத்திலிங்கம்<<>>, மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால், இது அடிப்படை ஆதாரமற்றது என அவர் மறுத்துள்ளார். EPS-யிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைய உள்ளதாக வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. இதுபோன்ற பொய் செய்திகள் எனக்கு வருத்தமளிக்கிறது. அதிமுகவை மீட்டெடுத்து ஆட்சியில் அமர வைப்பதுதான் எனது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
MP, MLA-க்கள் வழக்குகளில் சாட்டையை சுழற்றும் கோர்ட்

MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாக கருதப்படும். மேலும், ஐகோர்ட் தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
News November 14, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.


