News September 29, 2025
ஆசிய கோப்பை: உணர்ச்சிமிகு தருணங்கள் PHOTOS

பாக்.,ஐ வீழ்த்தி இந்தியா ஆசிய கோப்பையை 9-வது முறையாக வென்றுள்ளது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்தியா தோற்கவில்லை என்பது அணியின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான நீலப்படைக்கு அரசியல் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். இந்நிலையில், ஃபைனலின் மறக்க முடியாத தருணங்களை மேலே swipe செய்து பாருங்கள்.
Similar News
News September 29, 2025
தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டாரா விஜய்?

கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசலைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பிய விஜய், தற்போது திருச்சி விமானம் நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அவர் வீட்டிலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில், சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கு Charter flight ஒன்று கிளம்பியதையும், ஒப்பிட்டு பார்த்து இச்செய்தி வெளியாகி இருக்கிறது.
News September 29, 2025
BREAKING: அவசரமாக கிளம்பினார் விஜய்

விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் கரூர் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
News September 29, 2025
ராகுல் காந்தியிடம் எமோஷனலாக பேசிய விஜய்

விஜய்யுடன் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவித்த ராகுல், அங்கு நடந்தவை பற்றியும், விஜய்யின் மனநிலை குறித்தும் கேட்டறிந்தார். ராகுலிடம் விஜய் எமோஷனலாக பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனெவே விஜய்க்கும் ராகுலுக்கும் நல்லுறவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் இந்த Call பேசுபொருளாக மாறியுள்ளது.