News September 29, 2025
TNPSC குரூப் 4 ரிசல்ட் அப்டேட்

கடந்த ஜூலை 12-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 4-வது வாரத்தில் வெளியாகும் என TNPSC தலைவர் S.K.பிரபாகர் அறிவித்துள்ளார். அத்துடன், நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தேர்வை 4,18,791 பேர் எழுதியுள்ளனர். 1,34,843 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். இத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 16, 2025
இந்தியாவில் பாரினர்ஸ் அதிகம் விரும்பும் இடங்கள்

இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இதனால், இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்கள், இந்தியாவில் அதிகம் செலவிடும் டாப் இடங்கள் எவை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.16 ) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News December 16, 2025
சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு.. SC-ல் வழக்கு

நீதிபதி G.R.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி SC-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி குறித்து திமுக ஆதரவு கட்சியினர் சட்டவிரோத போராட்டங்களை நடத்தி அவதூறு பரப்புவதாகவும், அவர்கள் மீது மாநில அரசும், போலீசும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


