News September 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 29, புரட்டாசி 13 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: அதிதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

Similar News

News September 29, 2025

பும்ராவுக்கு எதிராக முதல்முறை..

image

ஆசிய கோப்பை ஃபைனலில், முதலில் பேட்டிங் செய்த பாக்., அணியினரை இந்திய பவுலர்கள் திணறடித்தனர். இருப்பினும், பும்ராவின் பந்துவீச்சில் ஒரு புது சாதனையை பாக்., வீரர் நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் பும்ராவுக்கு எதிராக 3 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை ஃபர்ஹான் பெற்றுள்ளார். பொல்லார்ட், கேமரூன் க்ரீன் உள்ளிட்டோர் பும்ராவுக்கு எதிராக 2 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

News September 29, 2025

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

image

USA-ன் மிச்சிகனில் உள்ள ஒரு தேவாலயத்தின் கதவை காரால் உடைத்த 40 வயது நபர் ஒருவர், துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அத்துடன், தேவாலயத்துக்கும் தீ வைத்துள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். மேலும், தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இது கிறிஸ்தவர்களை இலக்காக கொண்ட மற்றொரு தாக்குதல் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

News September 29, 2025

செப்டம்பர் 29: வரலாற்றில் இன்று

image

*உலக இதய நாள்.
*1832: இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.
*1957: அரசியல்வாதி H.ராஜா பிறந்தநாள்.
*1970: நடிகை குஷ்பு பிறந்தநாள்.
*2011: வாச்சாத்தி வன்முறையில், தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!