News September 29, 2025

Asia Cup: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

image

ஆசிய கோப்பை 2025-ஐ சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. பாக்.,ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 147 ரன்களை சேஸிங் செய்த இந்தியா, 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 69 ரன்கள் குவித்து திலக் வர்மா வெற்றிக்கு வழிவகுத்தார்.

Similar News

News September 29, 2025

பிடல் காஸ்ட்ரோ பொன்மொழிகள்

image

*விதைத்தவன் உறங்கலாம், ஆனால் விதைத்தவன் ஒருபோதும் உறங்குவதில்லை.
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
*தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்.
*நம் தன்னம்பிக்கை, திட்டம், நடவடிக்கை ஆகியவை தீவிரமாகியிருக்கும் போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல.

News September 29, 2025

மத்திய கிழக்கில் மகத்தான வாய்ப்பு: டிரம்ப்

image

மத்திய கிழக்கில் சிறப்பான ஒன்றை அடைய ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சமீபத்தில் ஐநாவில் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நாடுகளும் ஒரு சிறப்பான முடிவை எதிர்நோக்குவதாகவும், அதை தாங்கள் (USA) முடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News September 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

error: Content is protected !!