News April 14, 2024

மீன் சாப்பிடும்போது, மறந்தும் இதை செய்து விடாதீர்கள்

image

தயிரில் வைட்டமின் பி2, பி12, பொட்டாசியம், கால்ஷியம் சத்துக்கள் உள்ளன. மீனில் புரதம், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. தயிருக்கு செரிமானத்தை மந்தப்படுத்தும் தன்மை உண்டு. ஆதலால் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுத்து கொள்வது செரிமானத்தை மந்தமடைய செய்யும். இதனால் வயிறு பிரச்னைகள், தோல் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆதலால் மறந்தும் மீன் சாப்பிடுகையில் தயிரை எடுக்காதீர்கள்.

Similar News

News November 6, 2025

அரைஞாண் கயிறு கட்டுவதில் இப்படி ஒரு சிக்கலா?

image

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் பல நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகளையும் அது ஏற்படுத்துமாம். அரைஞாண் கயிறை வருஷக் கணக்கில் இடுப்பில் கட்டுவதால் அதில் அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதனால் நூல் கயிறை தவிர்த்து வெள்ளியில் அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர்.

News November 6, 2025

நாளை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையே(நவ.7) கடைசி நாளாகும். மாணவர்களின் விவரங்களை பிழையின்றி திருத்தம் செய்து பதிவேற்றுவதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT

News November 6, 2025

இறந்தவர் பெயரில் பிரேசில் மாடலுக்கு வாக்காளர் பதிவு

image

ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய <<18212147>>பிரேசில் மாடலின்<<>> வாக்காளர் பதிவை India Today ஆய்வு செய்துள்ளது. அதில், பிரேசில் மாடல் வாக்காளர் பதிவின் உண்மையான சொந்தக்காரர் குனியா என்பதும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பே இறந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் இருப்பதையும், அதுவும் வெளிநாட்டு பெண்ணின் புகைப்படத்துடன் இருப்பதையும் கண்டு குனியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!