News September 28, 2025

இனி மாதந்தோறும் ₹1,500.. புதிய அப்டேட்

image

பணியாளர் வைப்பு நிதி(EPFO) அமைப்பு, விரைவில் அதன் புதிய தளமான EPFO 3.0-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. PF கணக்கு வைத்திருப்போர் ATM-ல் பணம் எடுக்கும் வசதி, PF கணக்கை UPI-யுடன் இணைப்பது, எளிதான கிளெய்ம் உள்பட பல புதிய அம்சங்கள் இதில் இருக்கும். மேலும், அக்.10-11 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில், PF பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்சம் பென்ஷன், ₹1500–₹2000 ஆக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News September 29, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 29, 2025

Asia Cup: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

image

ஆசிய கோப்பை 2025-ஐ சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. பாக்.,ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 147 ரன்களை சேஸிங் செய்த இந்தியா, 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 69 ரன்கள் குவித்து திலக் வர்மா வெற்றிக்கு வழிவகுத்தார்.

News September 29, 2025

அக்கறையுடன் விசாரித்த ராகுல் காந்தி: CM ஸ்டாலின்

image

கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் ராகுல் காந்தி விசாரித்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் விசாரித்ததாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்த சம்பவம் மிகுந்த துயரத்தை அளித்ததாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் ஆழ்ந்த இரங்கலையும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

error: Content is protected !!