News September 28, 2025

ரஜினியை வம்புக்கு இழுக்கும் நெட்டிசன்ஸ்

image

விஜய்யின் அரசியல் பயணத்தில், நேற்று நடந்த துயர சம்பவம் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களுக்கு கொள்கை முக்கியமல்ல, தங்கள் நாயகனை ரசிப்பது மட்டுமே முதன்மை. அதனாலேயே நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறினாலும், ரசிகர்கள் ரசிகர்களாகவே தொடர்கின்றனர். இதை நன்கு உணர்ந்ததால் தான், பழுத்த அனுபவம் கொண்ட கட்சிகளுடன் எதற்கு போட்டி என ரஜினி ஒதுங்கிவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News

News September 29, 2025

சூர்யா அவுட்டா? இல்லையா?

image

இன்று சூர்யகுமார் யாதவ் அவுட்டானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுவும் அந்த அவுட் சந்தேகத்துக்கு இடமானது என்றால்…? SM-ல் இதுதான் இப்போது விவாதமே. ஷாஹின் அஃப்ரிதியின் ஓவரில் சூர்யா கொடுத்த கேட்சை பாக்., கேப்டன் ஆகா டைவ் அடித்து கேட்ச் செய்தார். ஆனால், பந்து தரையில் பட்டது போல தெரிந்தது. மூன்றாவது அம்பயரும் அதை அவுட் என்று அறிவித்தார். ஆனாலும், ரசிகர்கள் ஏற்கவில்லை. உங்க கருத்து?

News September 29, 2025

BREAKING: விஜய் உடன் ராகுல் காந்தி பேச்சு

image

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் உடன் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பிரசார கூட்டத்தில் குழந்தைகள் உள்பட 40 பேர் பலியான சம்பவத்தால் விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பதாக தவெக வழக்கறிஞர் அறிவித்திருந்தார். தனது இரங்கல் பதிவிலும் சொல்லொண்ணா துயரில் இருப்பதாக விஜய் பதிவிட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி பேசியுள்ளார். இது அரசியல் களத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

News September 29, 2025

Asia Cup: கோப்பையை நோக்கி இந்தியா

image

ஆசிய கோப்பை ஃபைனலில் கோப்பையை நோக்கி இந்தியா போராடி வருகிறது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளேயிலேயே சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். இதனால் ஆட்டத்தின் நிலை மாறியபோது களத்திற்கு வந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.

error: Content is protected !!