News September 28, 2025
ஒரே நாளில் ரேஷன் கார்டு.. வழிமுறைகள் இதோ!

TN-ல் ரேஷன் கார்டுக்கு மனு கொடுத்து ஒரே நாளில் பெற முடியுமா? என்றால் முடியும். அதற்கான வழி இருக்கிறது. வாரந்தோறும் திங்கள்கிழமை கலெக்டர் ஆபிஸில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தால் உடனடியாக பரிசீலனை செய்து கார்டுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் கூட பலருக்கு ஒரே நாளில் ரேஷன் கார்டு, பட்டா, ஓய்வூதிய சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News September 29, 2025
Asia Cup: கோப்பையை நோக்கி இந்தியா

ஆசிய கோப்பை ஃபைனலில் கோப்பையை நோக்கி இந்தியா போராடி வருகிறது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் பவர் பிளேயிலேயே சொற்ப ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர். இதனால் ஆட்டத்தின் நிலை மாறியபோது களத்திற்கு வந்த திலக் வர்மா, சஞ்சு சாம்சன் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.
News September 29, 2025
வைரலாகும் எம்ஜிஆர் போட்டோ

1980-ல் சென்னையில் எம்ஜிஆர் பேச்சை கேட்க திரண்ட மக்கள் கூட்டத்தை காட்டும் படம், தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இம்மாதிரி கூட்டங்களுக்கு சென்றுவந்த தங்கள் அப்பாக்களும் தாத்தாக்களும் ‘பையை தொலைத்துவிட்டோம்’, ‘செருப்பை விட்டுவிட்டோம்’ என்று கூறியதாக நினைவலைகளை ஷேர் செய்கின்றனர். இவ்வளவு பெரிய கூட்டத்தை அந்த காலத்தில் எப்படி கட்டுப்படுத்தி இருப்பார்கள்?
News September 29, 2025
ராசி பலன்கள்(29.09.2025)

➤மேஷம் – சாந்தம் ➤ரிஷபம் – பணிவு ➤மிதுனம் – பெருமை ➤கடகம் – களிப்பு ➤சிம்மம் – உழைப்பு ➤கன்னி – விருத்தி ➤ துலாம் – நன்மை ➤விருச்சிகம் – பக்தி ➤தனுசு – ஆசை ➤மகரம் – ஆக்கம் ➤கும்பம் – பயணம் ➤மீனம் – கடமை