News September 28, 2025
அர்ஷ்தீப் சிங் மீது புகார் கொடுக்கும் பாகிஸ்தான்

இந்திய பவுலர் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக பாகிஸ்தான் ICC-ல் புகாரளிக்க முடிவு செய்துள்ளது. IND vs PAK போட்டியின் போது, பாக்., வீரர்கள் துப்பாக்கியால் சுடுவது போன்றும், இந்திய போர் விமானங்களை வீழ்த்தியதை போலவும் சைகை காட்டினர். இதை எதிர்த்து அர்ஷ்தீப் செய்த சைகை வைரலானது. இதனால் தங்களுக்கு ICC 30% அபராதம் விதித்த போல, அர்ஷ்தீப் சிங்கிற்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பாக்., முயன்று வருகிறது.
Similar News
News September 28, 2025
ஷாக் கொடுத்த அபிஷேக்..!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை ஃபைனலில், இந்தியா முதல் விக்கெட்டை பறிகொடுத்துள்ளது. எப்போதுமே இறங்கியதுமே அதிரடி காட்டும் அபிஷேக் ஷர்மா 5 ரன்களில் அவுட் ஆகி ஷாக் கொடுத்துள்ளார். அபிஷேக் 10 பந்துகளை எதிர்கொண்டாலே, 30-க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கும் வீரர் என்பதால், இது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 2 ஓவர்களில் இந்திய அணி 10/1 ரன்களை எடுத்துள்ளது.
News September 28, 2025
BREAKING: கரூர் சம்பவம்.. விஜய் எடுத்த அதிரடி முடிவு

கரூர் துயர சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் அறிவுறுத்தலின்பேரில், ஏற்கெனவே அரசுக்கு எதிராக ஐகோர்ட்டை நாடியுள்ள தவெக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது. மேலும், பிரசார கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாகவும், கற்கள் எறியப்பட்டதாகவும் CTR நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
News September 28, 2025
தலையணைக்குள் இப்படி ஒரு ஆபத்தா?

தலையணை இல்லாமல் தூங்குவது பலருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று என தலையணை வைத்துத் தூங்குபவர்கள் பலர். ஆனால், அமெரிஸ்லீப் பவுண்டேஷனின் ஆய்வு, உங்கள் தூக்கத்தையே கெடுத்துவிடும். ஆம், அடிக்கடி துவைக்காத, அழுக்குப் படிந்த தலையணை உறைகளில், டாய்லெட் சீட்டில் உள்ளதைவிட 17,000 மடங்கு கிருமிகள் உள்ளனவாம். இதனால் சருமப் பிரச்னைகள் உள்பட பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.