News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.
Similar News
News December 8, 2025
தென்காசி: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தென்காசி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04636-225326 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.
News December 8, 2025
சங்கரன்கோவிலில் 257 பேர் கைது!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், சங்கரன் கோவில் தேரடி வீதியில் நேற்று ஆர்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி கோவில் வாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, கோ.செயலாளர் ஆறுமுகச்சாமி, மா.செ ஆறுமுகம் உள்ளிட்ட 257 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
News December 8, 2025
தென்காசி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.08) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.


