News September 28, 2025

அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியவில்லை: அண்ணாமலை

image

திமுக அரசுக்கு கூட்டத்தை கையாள தெரியாமல் விஜய் மீது பழியை போட விரும்புவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யை காண சிறிய இடத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதே நெரிசலுக்கு காரணம் என காவல்துறை கூறுவதை ஏற்க முடியாது என்றார். அப்படி எனில், சென்னை மெரினாவில் கடந்தாண்டு நடந்த ஏர் ஷோவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது எப்படி, 5 பேர் பலியானது ஏன்? என கேள்வி எழுப்பினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News September 28, 2025

ஆம்புலன்ஸை தவெக தொண்டர்கள் தாக்கினர்: மா.சு.

image

கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை வழிமறித்து தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் EPS எனவும், தவெக தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய அவரே இதற்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், இத்தகைய பேரிடரிலும் EPS அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News September 28, 2025

விஜய்யை தாக்கி பேசிய பதிவு.. சர்ச்சைக்கு கயாது விளக்கம்

image

கரூர் கூட்ட நெரிசலில் எனது நண்பரை இழந்துவிட்டேன். விஜய் சுயநல அரசியல் செய்து வருகிறார் என நடிகை கயாது லோஹர் பெயரிலான X தள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், அது போலி கணக்கு, அதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கரூரில் தனக்கு நண்பர்கள் யாரும் இல்லை எனவும், அந்த சம்பவத்தால் அதிகம் வருத்தமடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

News September 28, 2025

PM மோடியை சந்தித்த துணை ஜனாதிபதி CPR!

image

டெல்லியில், PM மோடியை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் நிகழ்ந்த துயரம் தொடர்பாக PM மோடி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனுடன், பலதரப்பட்ட விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக PM மோடி தனது X பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!