News September 28, 2025
திருப்பத்தூர் அருகே சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..

நாட்றம்பள்ளி அடுத்த தண்ணீர் பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 12.15 மணியளவில் சென்னையிலிருந்து குப்பம் நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதியதில் சாத்விக் (17) என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
திருப்பத்தூர்: பொது வெளியில் திருநங்கைகள் மோதல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட, காதர்பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் தினந்தோறும் திருநங்கைகள், ரயில் பயணிகளிடம் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (07.12.2025) மாலை 5:45 மணி அளவில் திருநங்கைகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கூச்சலிட்டனர். மேலும், வாணியம்பாடி காவல்துறையினர் திருநங்கைகளிக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
News December 8, 2025
தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்தவர் விபரம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசிக்கும் மரியாள் என்பவர் தனது சகோதரர் ஸ்டீபன் ( 26 ) தான் இறந்தவர் என நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
திருப்பத்தூரில் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு!

திருப்பத்தூர் புத்தகத் திருவிழா 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பதாக ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி அறிவித்துள்ளார். எனவே இன்று டிசம்பர் 8 தேதி முடிவடைய இருந்து புத்தக கண்காட்சி டிசம்பர் 9,10,11 ஆகிய மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.


